ஆன்லைனில் குழந்தை தத்தெடுப்பு!

நன்றி குங்குமம் முத்தாரம்

அமெரிக்காவில் வளர்ப்பு பெற்றோர் உரிமம் என்ற நடைமுறை வெகு பிரபலம். அனாதை மற்றும் ஆதரவற்ற குழந்தைகளை இந்தப் பெற்றோர்களிடம் தான் குழந்தைகள் நல வாரியம் ஒப்படைக்கும். குழந்தைகளை வளர்ப்பதற்கு மாதந்தோறும் ஒரு தொகையை அந்தந்த மாகாண நிர்வாகம் வழங்கும். 2018-இல் இவான் - கயேலா தம்பதியினர் வளர்ப்புப் பெற்றோர் உரிமம் பெற்றனர். இவர்களுக்கு முன்பே நான்கு குழந்தைகள்.  இருந்தாலும் தங்களுக்குப் பிறக்காத ஒரு குழந்தையை வளர்க்க வேண்டும் என்பது அவர்களது விருப்பம். குறைப்பிரசவத்தில் பிறந்த ஒரு பெண் குழந்தை இவான் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுகிறது. அந்தக் குழந்தைக்கு இஸ்லா என்று பெயரிடுகின்றனர்.

கடந்த பிப்ரவரியில் இஸ்லாவிற்கு இரண்டு வயதானபோது அவளைத் தத்தெடுக்க முடிவு செய்கிறார் இவான். அவரின் முடிவுக்கு பச்சைக்கொடி காட்டு கிறது குடும்பம். நீதிமன்றத்தில் இஸ்லாவைத் தத்தெடுக்க இவான் விண்ணப்பித்தார். அந்நேரம் அமெரிக்காவில் கொரோனோ தாக்குதல் ஆரம்பித்தது. லாக்டவுனால் நீதிமன்றம் எப்போது இயங்கத்தொடங்கும் என்று யாருக்குமே தெரியாது. இந்நிலையில் ஜூம் ஆப் வழியாக நீதிமன்றம் சில வழக்குகளைக் கையிலெடுக்கத் தொடங்கியது. அதில் ஒன்று இஸ்லாவின் தத்தெடுப்பு. ஜூம் ஆப் வழியாக விர்ச்சுவல் கோர்ட்டில் நடந்த முதல் தத்தெடுப்பு நிகழ்வு இதுதான்.

Related Stories: