×

செங்குருதிச் சிறுதுணிக்கையை செயற்கையாக உருவாக்கி ஆராய்ச்சியாளர்கள் சாதனை

மனித உடலில் ஒட்சிசனை அனைத்து பாகங்களிற்கும் எடுத்துச் செல்லும் பணியை இரத்தத்தில் உள்ள கூறுகளுள் ஒன்றான செங்குருதிச் சிறுதுணிக்கை மேற்கொண்டு வருகின்றது. இவ்வாறான செங்குருதிச் சிறுதுணிக்கையை செயற்கையான முறையில் உருவாக்கி ஆராய்ச்சியாளர்கள் சாதனை படைத்துள்ளனர். உயிரியல் கூறு மற்றும் ஆய்வுகூடத்தில் வளர்க்கப்பட்ட பொலிமர் என்பவற்றினை இணைத்து செயற்கை முறையில் செங்குருதிச் சிறுதுணிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.

சர்வதேச உயிர் பொறியியலாளர் குழு ஒன்றே இதனை உருவாக்கியுள்ளது. செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த செங்குருதிச் சிறுதுணிக்கைகள் இயற்கையாக அமைந்தவற்றினை விடவும் வினைத்திறன் கூடியவை என ஆராய்ச்சியாளர் குழு தெரிவித்துள்ளது. மேலும் இக் கண்டுபிடிப்பானது மருத்துவ உலகில் மற்றுமொரு புதிய அத்தியாயத்தினை உருவாக்கியுள்ளதாக பார்க்கப்படுகின்றது.


Tags : Researchers , Red Bull, artificial, researchers, record
× RELATED லண்டனில் ஆழ்கடலில்...