×

முககவசம் அணியாதவர்களை பிடிக்க பறக்கும் படைகள் அமைப்பு: காட்டேஜ் திறந்திருந்தால் கடும் நடவடிக்கை

ஊட்டி: கொரோனா வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுக்க முகவசம் அணியாதவர்கள், எச்சில் துப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பதற்காக பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:  கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக, ஊரடங்கு உத்தரவு இம்மாதம் 30ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை பல்வேறு கட்டுபாடுகளுடனும், சில தளர்வுகளுடனும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, மண்டலத்திற்குள் பொது போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. இதனால், பொது இடங்களில் பொதுமக்களிடம் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அரசு உத்தரவின் படி, கட்டாய முகக் கவசம், சமூக இடைவெளி ஆகிய நோய் பரவல் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை எனத் தெரிய வருகிறது. இதனால், கொரோனா நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதை கண்காணிக்க, நீலகிரி மாவட்டத்தில் அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளில், மக்கள் அதிகளவில் கூடும் பகுதிகளில் பல்வேறு துறை சார்நிலை அலுவலர்கள் அடங்கிய பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவர்கள் முக கவசம் அணியாதவர்கள், போதிய சமூக இடைவெளியை பின்பற்ற தவறும் நிறுவனங்கள், தனி நபர்கள், பொது இடங்களில் எச்சில் துப்புவர்களுக்கு தமிழ்நாடு கொள்ளை நோய்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பார்கள். மேலும், சம்பந்தப்பட்டவர்களுக்கு ரூ.50 அபராதம் விதிக்கப்படும்.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் விருந்தினர்கள் தங்குவது தொடர்பாக புகார்கள் வந்துள்ளதால் அனைத்து தனியார் தங்கும் விடுதிகளும் நேரடியாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. ஆய்வின் போது, விடுதிகள் செயல்படுவது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன் விடுதி பூட்டி சீல் வைக்கப்படும். விடுதிகள் செயல்படுவது தொடர்பான புகார்களை பொதுமக்கள் சம்பந்தப்பட்ட ஆர்டிஓ., மற்றும் தாசில்தார் ஆகியோருக்கு புகார் தெரிவிக்கலாம்.

 ஊட்டி கோட்டத்திற்குட்பட்டவர்கள் 0423 2445577 என்ற எண்ணில் ஆர்டிஓ.,விற்கும், 0423 2442433 என்ற எண்ணிற்கு ஊட்டி தாசில்தார், 0423 2508123 என்ற எண்ணில் குந்தா தாசில்தாருக்கும் தெரிவிக்கலாம். குன்னூர் துணை கலெக்டர்- 0423 2206220, குன்னூர் தாசில்தார் 0423 2206102, கோத்தகிரி தாசில்தார் 04266 271718, கூடலூர் ஆர்டிஓ.,- 04262 261295, கூடலூர் தாசில்தார் 04262 261252, பந்தலூர் தாசில்தார் 04262 220734 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.  மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் அனைத்து தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் பொது இடங்களுக்கு செல்லும் போது கட்டாயம் முகக் கவசம் அணிவதையும், பொது இடங்களில் எச்சில் துப்புவதை தவிர்த்தும், சமூக இடைவெளியை முறையாக கடைபிடித்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு இன்னசென்ட் திவ்யா கூறினார்.


Tags : men ,cottage , Flying Force ,catch uniformed,Heavy action,cottage , open
× RELATED ஈக்வடார் நாட்டின் மேயர் பிரிஜிட் கார்சியா சுட்டுக்கொலை!