×

மும்பை, டெல்லியை தொடர்ந்து கொரோனா வைரஸ்கள் சென்னையில் அதிகம் படையெடுப்பு : 5 மண்டலங்களில் பாதிப்பு 2,000ஐ தாண்டியது

சென்னை:  ஜூன் 7ம் தேதி நிலவரப்படி, சென்னையில் எந்த பகுதியில் எத்தனை பேருக்கு தொற்று என்பதை மண்டலம் வாரியாக சென்னை மாநகராட்சி வெளியிட்டது. சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் 20,993 ஆக உயர்ந்துள்ளது. இதில் 10,502 பேர் குணம் அடைந்துள்ளனர். 10,066 பேர் பாதிப்புடன் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 197ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 59.87% பேர் ஆண்கள், 40.12% பெண்கள் ஆவர். 0.01% திருநங்கைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் 5 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 2,000ஐ தாண்டியுள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் ராயபுரத்தில் அதிகபட்சமாக 3,717 ஆக உயர்ந்துள்ளது. தண்டையார்பேட்டையில் 2,646 ஆகவும். கோடம்பாக்கத்தில் 2,323 ஆகவும், தேனாம்பேட்டையில் 2,734 ஆகவும், திருவிக நகரில் 2,073 ஆக உள்ளது.

ஜூன் 7ம் தேதி நிலவரப்படி சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்கள் விவரத்தை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அவற்றின் விவரத்தை இப்போது பார்ப்போம்.

ராயபுரம் – 3,717
கோடம்பாக்கம் – 2,323
திரு.வி.க நகரில் – 2,073
அண்ணா நகர் – 1,864
தேனாம்பேட்டை – 2,734
தண்டையார் பேட்டை – 2,646
வளசரவாக்கம் – 1,043,
அடையாறு – 1,155,
திருவொற்றியூர் -784,
மாதவரம் – 579
பெருங்குடி – 389,
சோளிங்கநல்லூர் – 366,
ஆலந்தூர் – 364,
அம்பத்தூர் – 773,
மணலி – 312 பேர், மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட 228 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Tags : Delhi ,Mumbai ,zones ,Chennai ,Chennai With Delhi , Mumbai, Delhi, Corona, Virus, Madras, More, Invasion, 5 Zones, Damage
× RELATED 29 ரன் வித்தியாசத்தில் டெல்லியை...