வைரலாகும் மருத்துவமனை ரசீது இரு துளி கிருமிநாசினிக்கு ரூ.100 கட்டணம் வசூல்

மதுரை: மதுரையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு ஒருவர் தனது மனைவியுடன் சிகிச்சைக்கு சென்றுள்ளார். அப்போது  அவரிடம் ரூ.400 கட்டணம் பெறப்பட்டு, அதற்கு ரசீது தரப்பட்டது. அதில் ஆலோசனைக் கட்டணம் ரூ.300ம், அதற்கு கீழே  கொரோனா கிருமி நாசினிக்கென ரூ.100ம் என இருந்துள்ளது. இது ஆச்சர்யம் அளித்ததால்,  பில் கவுண்டரில் இருந்த பெண்ணிடம் இதுகுறித்து கேட்டபோது, கொரோனா வைரஸ் கிருமி நாசினிக்கென ரூ.100 வசூலிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். கிருமிநாசினி யாரும் தரவில்லையே என்று அவர் கேட்டபோது, வாசலில் இருக்கும் செக்யூரிட்டி, அவர்கள் உள்ளே நுழைந்தபோது, கையில் 2 துளிகள் ஹேன்ட் சானிடைசரை  ஊற்றியதற்காகவே, இந்த தொகையை வசூலித்திருப்பது தெரிந்தது.

ஒரு ஹேன்ட் சானிடைசர் வெறும் ரூ.30க்குள் வாங்கலாம் என்ற நிலையில், 2 துளிகளுக்கு ரூ.100 வசூலிக்கிறீர்களே? என்று அவர் கேட்டுள்ளார். அந்த பெண்ணிடமிருந்து சரியான பதில் இல்லை. மற்ற இடங்களில் இலவசமாக அளிக்கப்படும் இந்த ஹேன்ட் சானிடைசருக்கு ரூ.100 வாங்கும் இந்த மருத்துமவனைக்கு சிகிச்சைக்கு வருபவர்களிடம் பெரும் பணத்தை கறந்து விடுவார்கள்? என்ற எச்சரிக்கையுடன், பாதிக்கப்பட்ட அவர் சமூக வலைத்தளங்களில் மருத்துவமனை ரசீதுடன் தனது அனுபவத்தை பதிவிட்டுள்ளார். இந்த செய்தி வைரலாகி வருகிறது.

Related Stories: