மகாராஷ்டிராவில் பாதிப்பு 82,000-ஐ தாண்டியது: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.46 லட்சமாக உயர்வு; 6929 பேர் பலி

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 46 ஆயிரத்தை தாண்டியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,46,628 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24  மணிநேரத்தில் மட்டும் 9971 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 287 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 6929 பேர் உயிரிழந்த நிலையில் 1,19,293 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 82,968 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 2969 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 37,390 பேர்    குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 30,152 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 251 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 16,395 பேர் குணமடைந்துள்ளனர். டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 27,654 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு,  761 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 10,664 பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மாநில வாரியாக விவரம்:

அசாமில் 2397 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 547 பேர் குணமடைந்தது.

பீகாரில் 4915 பேருக்கு பாதிப்பு; 30 பேர் பலி; 2425 பேர் குணமடைந்தது.

சண்டிகரில் 309 பேருக்கு பாதிப்பு; 5 பேர் பலி; 273 பேர் குணமடைந்தது.

சத்தீஸ்கரில் 923 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 266 பேர் குணமடைந்தது.

கோவாவில் 267 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 65 பேர் குணமடைந்தது.

குஜராத்தில் 19,592 பேருக்கு பாதிப்பு; 1219 பேர் பலி; 13,316 பேர் குணமடைந்தது.

அரியானாவில் 3952 பேருக்கு பாதிப்பு; 24 பேர் பலி; 2134 பேர் குணமடைந்தது.

திரிபுராவில் 747 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 173 பேர் குணமடைந்தது.

கேரளாவில் 1807 பேருக்கு பாதிப்பு; 15 பேர் பலி; 762 பேர் குணமடைந்தது.

ராஜஸ்தானில் 10331 பேருக்கு பாதிப்பு; 231 பேர் பலி; 7501 பேர் குணமடைந்தது.

ஜார்கண்டில் 1000 பேருக்கு பாதிப்பு; 7 பேர் பலி; 473 பேர் குணமடைந்தது.

லடாக்கில் 99 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 48 பேர் குணமடைந்தது.

மணிப்பூரில் 157  பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 52 பேர் குணமடைந்தது.

மேகலாயாவில் 33 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 13 பேர் குணமடைந்தது.

மிஸ்ரோமில் 24 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.

ஒடிசாவில் 2781 பேருக்கு பாதிப்பு; 8 பேர் பலி; 1716 பேர் குணமடைந்தது.

பாணடிச்சேரி 99 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 36 பேர் குணமடைந்தது.

பாஞ்சாப்பில் 2515 பேருக்கு பாதிப்பு; 50 பேர் பலி; 2092 பேர் குணமடைந்தது.

உத்தரகாண்ட்டில் 1303 பேருக்கு பாதிப்பு; 11 பேர் பலி; 423 பேர் குணமடைந்தது.

கர்நாடகாவில் 5213 பேருக்கு பாதிப்பு; 59 பேர் பலி; 1968 பேர் குணமடைந்தது.

ஜம்மு காஷ்மீரில் 3467 பேருக்கு பாதிப்பு; 39 பேர் பலி; 1126 பேர் குணமடைந்தது.

தெலுங்கானாவில் 3496 பேருக்கு பாதிப்பு; 123 பேர் பலி; 1710 பேர் குணமடைந்தது.

மேற்கு வங்கத்தில் 7738 பேருக்கு பாதிப்பு; 383 பேர் பலி; 3119 பேர் குணமடைந்தது.

உத்தரப்பிரதேசத்தில் 9733 பேருக்கு பாதிப்பு; 257 பேர் பலி; 5648 பேர் குணமடைந்தது.

ஆந்திரப்பிரதேசத்தில் 4510 பேருக்கு பாதிப்பு; 73 பேர் பலி; 2620 பேர் குணமடைந்தது.

அருணாச்சலப்பிரதேசத்தில் 47 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.

மத்தியப்பிரதேசத்தில் 9228 பேருக்கு பாதிப்பு; 399 பேர் பலி; 6108 பேர் குணமடைந்தது.

இமாச்சலப்பிரதேசத்தில் 400 பேருக்கு பாதிப்பு; 5 பேர் பலி; 194 பேர் குணமடைந்தது.

அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 33 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 33 பேர் குணமடைந்தது.

தாதர் நகர் ஹவேலியில் 19 பேருக்கு பாதிப்பு; 1 குணமடைந்துள்ளார். யாரும் உயிரிழக்கவில்லை.

சிக்கிமில் 7 பேருக்கு பாதிப்பு; யாரும் குணமடையவில்லை; உயிரிழக்கவில்லை.

Related Stories: