பீகார் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகிய பாஜக; ஆன்லைன் மூலம் தேர்தல் பிரச்சாரத்தை இன்று தொடங்குகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா...!

பாட்னா: பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி அரசில் முதல்வராக நிதிஷ்குமார் உள்ளார். இம்மாநிலத்திற்கு வருகிற அக்டோபர், நவம்பரில் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இன்றைய சூழலில் வருகிற 2021  ஏப்ரல், மே மாதங்களில் தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம், மேற்குவங்கம் ஆகிய 4 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டியிருக்கிறது. இருந்தும், பீகார் தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ளதால் கொரோனாவுக்கு மத்தியில்  தேர்தல் பணியை முதல்வர் நிதிஷ்குமார் தொடங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

இதற்கிடையே, கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால், அரசியல் பொதுக்கூட்டங்கள் நடத்த, நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பீகார் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராகி  வருகிறது. இதன் ஒருபகுதியாக பீகார் சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா இன்று தொடங்குகிறார். இதற்காக, பீகார் மக்களுடன், ஆன்லைன் வழியாக அமித் ஷா  இன்று பேசுகிறார். இதற்காக, மாநில முழுவதும் உள்ள 72 ஆயிரத்துக்கும் அதிகமான பூத்களில், அமித் ஷாவின் பேச்சை கேட்க பாஜக சார்பில், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதனைபோல், மேற்கு வங்கத்தில் வரும் 8-ம் தேதி பேஸ்புக் வாயிலாக ஆன்லைன் பொதுக்கூட்டம் பாஜக திட்டமிட்டுள்ளது. இது பொதுக்கூட்டத்தை பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துரை அமைச்சருமான அமித்ஷா தொடங்கி வைத்து  உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Stories: