×

வாயில்லா ஜீவனுக்கு தொடரும் கொடூரம்; கேரளாவில் யானை; இமாச்சலில் பசு...வெடிமருந்து கலந்த உணவை மென்ற கர்ப்பிணி பசுவின் வாய் சிதைந்து காயம்...!

சிம்லா: கேரளாவில் வாயில்லா ஜீவனுக்கு நடத்த சோகம் மத்தியப்பிரதேசத்திலும் நடந்துள்ளது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் மர்ம நபர்கள் ஊருக்குள் வந்த யானைக்கு  அன்னாசி பழத்தில் வெடியை மறைத்து வைத்து கெடுத்துள்ளனர். இதை யானை சாப்பிட்டபோது வெடி வெடித்துள்ளது. இதல் வாய் சிதறி பலத்த காயம் அடைந்தது. இதனால் அந்த யானைக்கு பல நாட்களாக சாப்பிட முடியாத நிலை  ஏற்பட்டுள்ளது. யானை நாளுக்கு நாள் மெலிந்தது. வாயில் ஏற்பட்ட காயத்தில் ஈக்கள் மொய்ப்பதில் இருந்து தப்பிக்க யானை தண்ணீருக்குள் இறங்கி தலையை தண்ணீருக்குள் தாழ்த்தி நின்றுள்ளது.

இதையடுத்து, யானையை காப்பாற்ற, கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு தண்ணீரில் இருந்து கரையேற்ற முயன்றனர். ஆனால் முயற்சி பலனளிக்கவில்லை. தண்ணீரை விட்டு வெளியே வரமறுத்து நின்ற யானை சிறிது நேரத்தில் இறந்தது.   தொடர்ந்து யானை உடல் வனப்பகுதிக்குள் கொண்டு சென்று பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போதுதான் அது கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது வன அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஒருவர் கைது  செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் கர்ப்பிணி பசுவுக்குக் கோதுமை மாவு உருண்டைக்குள் வெடிமருந்து வைத்துக் கொடுத்ததில் அதன் வாய் சிதைந்து காயம் அடைந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இமாச்சலப்பிரதேச மாநிலம், பிலாஸ்பூர் மாவட்டம் ஜன்துட்டா பகுதியில், கர்ப்பிணி பசுவுக்கு, கோதுமை மாவு உருண்டைக்குள், வெடி வைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

அதனைக் கடித்த பசுவின் வாய் சிதைந்து படுகாயமடைந்தது. பசுவின் உரிமையாளர் குர்தயால் சிங் காயமடைந்த கர்ப்பிணி பசுவின் வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவேற்றியபோது இது வெளி உலகத்துக்குத் தெரிய வந்தது. பசுவுக்கு  நேர்ந்த இந்தக் கொடுமைக்குத் தனது பக்கத்து வீட்டுக்காரரே காரணம் என அதன் உரிமையாளர் குற்றஞ்சாட்டியுள்ளார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Kerala ,Himachal ,Cows , The horror that continues to gateless life; Elephant in Kerala; Cows in Himachal Pradesh get pregnant
× RELATED பாலியல் வன்கொடுமை கொடூரங்களுக்கு...