வட சென்னை பகுதியில் 401 பேருக்கு கொரோனா உறுதி

சென்னை: சென்னை ராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட சவுகார்பேட்டை, மண்ணடி, கொத்தவால்சாவடி, ஏழுகிணறு, பிராட்வே, யானைகவுனி, கொண்டித்தோப்பு, ராயபுரம், சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று ஒரே நாளில் 153 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.   தண்டையார்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட கொருக்குப்பேட்டை ஆரணி ரங்கன் தெரு, பாரதி நகர், தண்டையார்பேட்டை கருணாநிதி நகர், நேதாஜி நகர், புதுவண்ணாரப்பேட்டை செரியன் நகர், வஉசி நகர், சேணியம்மன் கோயில் தெரு, வியாசர்பாடி, கொடுங்கையூர், முத்தமிழ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 137 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெரம்பூர்: திருவிக நகர் மண்டலத்திற்கு உட்பட்ட செம்பியம் அம்மன் கோயில் தெருவில் தம்பதி, ராமகிருஷ்ணன் தெருவில் தம்பதி, பள்ளர் தெருவில் தாய், குழந்தை, புளியந்தோப்பு  கன்னிகாபுரத்தில் 24 வயது கர்ப்பிணி, வஉசி நகர், திருவிக நகர், கன்னிகாபுரம் ஆகிய பகுதிகளில் தலா 2 பேர், பெரவள்ளூர்  ஜிகேஎம் காலனி  27வது தெரு மற்றும் 30வது தெருவில் 2 பேர், அயனாவரம் பில்கிளின்டன்  சாலையில் 18 வயது கல்லூரி மாணவி, பேசின் பிரிட்ஜ் பகுதியில் 2  பேர், ஓட்டேரி தேசா காலனியில் 49  வயது ரயில்வே  ஊழியர், பிரிக்களின் சாலையில் 44 வயது ரயில்வே ஊழியர்,   பட்டாளம் போலீஸ் குடியிருப்பில் ஆய்வாளரின் மனைவி மற்றும் 3 வயது  குழந்தை,

பாஷ்யம் தெருவில் 2 பேர், தலைமைச் செயலக காவலர்  குடியிருப்பு பகுதி சந்தியப்பன் தெருவை சேர்ந்த   அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனை ஊழியர், நம்மாழ்வார்பேட்டை ரயில்வே மருத்துவமனை ஊழியர், கொன்னூர் நெடுஞ்சாலையில் 20 வயது பெண்,  பராக்கா சாலையில் 11 வயது சிறுவன், குட்டியப்பன் தெருவில் 19  வயது பெண் என  நேற்று ஒரே நாளில் 111 பேருக்கு  கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

ஒரே தெருவில் 53 பேர் பாதிப்பு

ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட வண்ணாரப்பேட்டை சோலையப்பன் தெருவில் கடந்த 2 நாட்களில் 53 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, ஒரு வீட்டில் 5 முதல் 9 பேர் வரை பாதிப்பு உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ராஜிவ்காந்தி மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்கண்ட பகுதியை சுகாதார துறை அதிகாரிகள் மூடி சீல் வைத்துள்ளனர். நோய் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Related Stories: