×

கொரோனா, காய்ச்சல் உள்ளவர்கள் தனி அறையில் தேர்வு எழுத அனுமதி: வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

சென்னை: தேர்வு மையங்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.  தமிழகத்தில் 10, பிளஸ் 1 தேர்வு நடைபெற இருப்பதையொட்டி தலைமை செயலாளர் சண்முகம் நேற்று வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: 10ம் வகுப்பு தேர்வுகள் 15ம்தேதி முதல் 25ம்தேதி வரையும், விடுபட்ட பிளஸ் 1 தேர்வு 16ம் தேதியும் நடைபெற உள்ளது. கடந்த மார்ச் மாதம் 24ம்தேதி நடந்த பிளஸ் 2 தேர்வுக்கு வராமல் போன மாணவர்களுக்கு 18ம்தேதியும் தேர்வுகள் நடக்கிறது.  தேர்வையொட்டி விடுதி மாணவர்களுக்காக 16ம்தேதி முதல் விடுதிகள் திறக்கப்பட வேண்டும்.  

மாணவர்கள், தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், பணியாளர்கள் தேர்வு மையங்களுக்கு சென்று வர வசதியாக போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும். இவர்கள் அனைவரும் தினமும் காலையில் தேர்வு மையத்துக்கு வரும்போது நுழைவாயிலில் காய்ச்சல் கண்டறியும் கருவி மூலம் அவர்களை சோதனை செய்யவேண்டும். சராசரியாக உடல் வெப்பம் 98.6 டிகிரி இருக்க வேண்டும். 99 டிகிரிக்கு மேல் இருந்தால் அவர்கள் கை கழுவிய பின்னரே மையத்துக்குள் அனுமதிக்க வேண்டும். அனைவருக்கும் முகக்கவசம் வழங்க வேண்டும்.  

 இன்புளூயன்சா காய்ச்சல், கொரோனா உள்ள மாணவர்களை தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்கலாம். முடியாத பட்சத்தில்  துணை தேர்வு எழுத செய்யலாம்.  
 விடுதிகளை தினம் 2 முறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும். விடுதி. தேர்வு அறையில் சமூக இடைவெளியுடன் மாணவர்கள் அமர வைக்க வேண்டும். அனைவரும் அடையாள அட்டை அணிய வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : Corona , Corona, fever, separate room
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...