பிசிஆர் சோதனை கட்டணம் குறைப்பு

சென்னை: தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றை உறுதிபடுத்த செய்யப்படும் பிசிஆர் சோதனைக்கான கட்டணத்தை குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ளதாவது: முதலமைச்சர் காப்பீடு அட்டை வைத்திருந்து பிசிஆர் சோதனை செய்தால் 2500 வசூலிக்கலாம். மற்றவர்களுக்கு 3000 மட்டுமே வசூலிக்க வேண்டும், (வீட்டிற்கு வந்து சோதனை செய்தால் கூடுதலாக 500 வசூலிக்கலாம்). அவசர சிகிச்சை தேவையில்லாத கொரோனா நோயாளிகளை தனியார் மருத்துவமனைகளுக்கு மாற்றுவது குறித்து முடிவெடுக்க மாவட்ட அளவில்  குழு அமைத்துள்ளது.

Related Stories: