உதவி சுகாதார அலுவலருக்கு கொரோனா

சென்னை: சென்னையில் கோடம்பாக்கம் மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பணிகளில் கோடம்பாக்கம் மண்டல உதவி சுகாதார அலுவலர் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கு நடத்திய பரிசோதனையில் அவரது கணவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

Related Stories: