தமிழகம் முழுவதும் ஊரடங்கை மீறியதாக 10.44 கோடி வசூல்

சென்னை: தமிழகம் முழுவதும் ஊரடங்கை மீறியதாக இதுவரை 5,48,842 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.10,44,7425 அபராதமாக போலீசார் வசூலிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருந்தாலும் 5ம் கட்ட நடைமுறையாக கடந்த 1ம் தேதி முதல் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு தற்போது நடைமுறையில் உள்ளது. அந்த வகையில் அரசு உத்தரவை மீறி வாகனம் ஓட்டியதாக நேற்று வரை போலீசார் 5,48,842 வழக்குகள் பதிவு செய்து 5,89,794 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அனைவரையும் சொந்த ஜாமீனில் போலீசார் விடுவித்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 4,50,479 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு போக்குவரத்து விதிகளை மீறியதாக ரூ.10,44,7425  அபராதமாக போலீசார் வசூலித்துள்ளனர்.

Related Stories: