×

எஸ்.ஐ. சுட்டுக்கொலை விவகாரம்: என்.ஐ.ஏ. அதிகாரிகள் குமரி வருகை

தக்கலை: குமரி மாவட்டம் களியக்காவிளை போலீஸ் சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (57), கடந்த ஜனவரி 8ம்தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் கன்னியாகுமரியை சேர்ந்தவர்களான அப்துல் சமீம், தவுபிக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்கப்பட்டது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்த வசதியாக தக்கலை காவல் நிலைய வளாகத்தில் தனி அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள், 2 கட்டமாக விசாரணை நடத்தினர். தற்போது, 3-வது கட்டமாக அதிகாரிகள் வந்து விசாரணை மேற்கொண்டனர்.


Tags : SIS Murder ,Kumari ,NIA Officers ,SI Murder , SI Murder, N.I.A. Officers, Kumari
× RELATED இத்தாலி வீரர்கள் சுட்டதில் 2 குமரி...