லாரிகளுக்கு காலாண்டு வரி ரத்து செய்ய வேண்டும்: அமைச்சரிடம் உரிமையாளர்கள் கோரிக்கை

சேலம்: மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி, செயலாளர் வாங்கிலி, பொருளாளர் தனராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்து ஒரு கோரிக்கை மனுவை அளித்தனர். அதில், கொரோனா ஊரடங்கு காரணமாக முதல் இரு மாதத்தில் வாகனங்களை இயக்காமல் இருந்த நிலையில், அத்தியாவசிய பொருட்களின் தேவைக்கு, மிக குறைந்த வாகனங்களே இயக்கப்பட்டன.   தற்போது தளர்வு அறிவிக்கப்பட்டாலும், தொழிற்சாலைகளில், பெரிய அளவில் உற்பத்தி  தொடங்கப்படவில்லை. இதேபோல் தொழில் முடங்கும் நிலை உள்ளது.

கர்நாடகா, ஒடிசா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில்   இரண்டு முதல், மூன்று மாதங்களுக்கு காலாண்டு வரிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தமிழகத்திலும் கனரக வாகனங்கள் உள்ளிட்ட சரக்கு லாரிகளுக்கு ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டு வரியை ரத்து செய்து லாரி தொழிலை காக்க வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறிப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வரிடம் ஆலோசித்து உரியநடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

Related Stories: