இணையதளத்தில் சினிமாவை வெளியிடுவது ஆரோக்கியமல்ல: அமைச்சர் கடம்பூர் ராஜு கருத்து

தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயின் தீவிரத்தை துல்லியமாக கணக்கிட உதவும் இக்லியா தானியங்கி வேதியியல் கருவி அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்புவிழா மற்றும் கொரோனாவில் இருந்து குணமடைந்த 15 நபர்களை வழியனுப்பும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற அமைச்சர் கடம்பூர் ராஜூ அளித்த பேட்டி:  ஊரடங்கு காலத்தில் தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட தமிழ் சினிமாக்களை இணையதளத்தில் தற்காலிகமாக வெளியிடுவதாக கூறியுள்ளனர். அதன்பிறகும் இந்நிலை நீடித்தால் அது சினிமா துறைக்கு ஆரோக்கியமானதாக இருக்காது.

இதன் மூலம் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்படுவார்கள். அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்படும். வழிபாட்டு தலங்கள், திரையரங்கம், மால்கள் ஆகியவற்றை திறப்பது குறித்து தமிழகத்தில் உள்ள சூழ்நிலைக்கு ஏற்ப முதல்வர் முடிவு எடுப்பார்.  இவ்வாறு கடம்பூர் ராஜு கூறினார்.

Related Stories: