×

பீகார் - நேபாள எல்லையில் மாடு கடத்தல் கும்பலால் குமரி ராணுவ வீரர் அடித்துக்கொலை: இன்று மாலை குருந்தன்கோட்டில் உடல் அடக்கம்

திங்கள்சந்தை: பீகார்-நேபாள எல்லையில்  மாடு கடத்தல் கும்பலால்  குமரி துணை ராணுவப்படை வீரர் அடித்து கொலை செய்யப்பட்டார். அவரது உடல் இன்று மாலை சொந்த ஊரில் அடக்கம் செய்யப்படுகிறது.    கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு அருகே வீரவிளை பகுதியை சேர்ந்தவர் பங்கிராஜ்(60). கூலித்தொழிலாளி. இவருக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உண்டு. இளைய மகன் மணிகண்டன் (28). இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு துணை ராணுவ பிரிவில் (எஸ்எஸ்சி) பணியில் சேர்ந்து தற்போது பீகார் மாநிலத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த மார்ச் 7ம்தேதி இரவு 8 மணிக்கு இவர் தாகூர்கன்ச் மாவட்டம் பீகார் - நேபாளம் எல்லையிலுள்ள கக்காட்டியா சோதனைச்சாவடியில் இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். இவருடன் 2 வீரர்களும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த வாகனத்தை தடுத்து சோதனையிட்டனர்.

அப்போது அதில் மாடுகள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க மணிகண்டன் முற்பட்டபோது, மாடு கடத்தல் கும்பல் பயங்கர ஆயுதங்களால் மணிகண்டனையும், மற்ற வீரர்களையும் பயங்கரமாக தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த மணிகண்டன் சிலிகுரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் கடந்த 5ம்தேதி இரவு இறந்தார். அவரது உடல்  திருவனந்தபுரம் வழியாக வீரவிளைக்கு இன்று மாலை 7 மணிக்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர் ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

Tags : soldier ,Kumari ,cow slaughter gang ,border ,Bihar ,Nepal , Bihar, Nepal border, cow abduction, Kumari soldier, slaughter, cow abduction, Kurundankot, burial
× RELATED குமரியில் டாரஸ் லாரியால் தொடரும் விபத்து