சொல்லிட்டாங்க...

இனிவரும் நாட்கள் மிகவும் கடுமையானதாக இருக்கும் என்பதால், அரசும், மக்களும் பொறுப்புணர்ந்து கொரோனாவை வீழ்த்த ஒருங்கிணைந்து செயல்பட  வேண்டும். - துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

Advertising
Advertising

பொதுமக்கள் மற்றும் சிறுகுறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்க மறுப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மத்தியஅரசு தீவிரமாக அழித்து வருகிறது. - காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

மத்திய பாஜ அரசும், அதிமுக அரசும் கைகோர்த்து, எப்படியாவது 10 ஆயிரம் கோடி சாலை திட்டத்தை நிறைவேற்றி, தமது சுயநலப்பசியை நிறைவேற்றிவிட வேண்டும் என துடிக்கின்றன. - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பு இல்லாததால் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே சாத்தியம். - அமைச்சர் செங்கோட்டையன்

Related Stories: