தனியார் துறைகளில் இடஒதுக்கீடு வழங்கக்கோரி விசிக நாளை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:  உயர் சிறப்பு நிறுவனங்கள் என 8 நிறுவனங்களில் எவருக்கும் இட ஒதுக்கீடு இல்லை என மத்திய அரசு விலக்கி வைத்துள்ளது.  மோடி பிரதமராகப் பொறுப்பேற்றதற்குப் பிறகு தனியார்மயமாக்கல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, மருத்துவப் படிப்பில் மத்திய தொகுப்பு இடங்களில் இதர  பிற்படுத்தப்பட்டோருக்கு(ஓபிசி) இடஒதுக்கீடு, சிறப்புக் கல்வி நிறுவனங்கள்  மற்றும் தனியார்துறைகளில் இடஒதுக்கீடு வழங்கவேண்டுமென மத்திய அரசை  வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களின் முன்பு ஜூன் 8ம் தேதி காலை 11 மணிக்கு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும். அரசு அறிவித்துள்ளபடி சமூக இடைவெளியைக்  கடைபிடித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.  இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: