வடசென்னையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் 35 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது எப்படி?தலையை பிய்த்துக் கொள்ளும் சுகாதாரத்துறை

சென்னை: வடசென்னையில் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் தங்கியிருந்த 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வடசென்னை ராயபுரம் எஸ்என் செட்டி  தெருவில் சிறுவர் சீர்திருத்த பள்ளி உள்ளது. இங்கு ஆதரவற்றவர்கள், குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறுவர்கள் தங்கவைக்கப்பட்டு  உள்ளனர். இங்கு  50க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தங்கி உள்ளனர். இவர்கள் சென்னை  தமிழகம் மற்றும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் சீர்திருத்தப் பள்ளி என்று அழைக்கப்படும் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து வெளியே வர முடியாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக இருக்கும். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து இவர்கள் வெளியே வந்ததும் இல்லை. இவர்களை உறவினர்கள் பார்த்ததும் இல்லை.

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் தங்கியுள்ள சிறுவர்களுக்கு காய்ச்சல் மற்றும் சளி இருந்ததால் கொரோனா தொற்று இருக்கலாம் என்பதால் சுகாதாரத்துறையினர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் நேற்று முன்தினம் 20 சிறுவர்களுக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது .  மேலும் சிறுவர்களை பரிசோதனை செய்ததில் நேற்று 15 பேருக்கு கொரோனா  இருப்பது தெரியவந்தது. பாதிக்கப்பட்ட சிறுவர்களை தண்டையார்பேட்டையில் உள்ள அரசு புறநகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

 மேலும் நோய் தொற்று பரவாமல் உள்ள சிறுவர்களை அருகிலுள்ள ஆதரவற்ற பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.  இங்கு தங்கியிருந்த சிறுவர்களுக்கு எப்படி நோய்த்தொற்று வந்தது என்பது கேள்விக்குறியாக உள்ளது.இது சுகாதார துறைக்கு பெரும் தலைலியையும், யார் மூலம் பரவி இருக்கலாம் என்பதையும் கண்டறிய முடியாமல் தவித்து வருகின்றனர்.

Related Stories: