துபாயிலிருந்து சிறப்பு விமானத்தில் மதுரை வந்த 4 பேருக்கு கொரோனா

சேலம்: மதுரை விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளுக்கு விமானங்கள் சென்று வந்தன. ஆனால் ஊரடங்கு காரணமாக இந்த விமான சேவைகள் கடந்த மார்ச் 23ம் தேதியுடன் நிறுத்தப்பட்டது. இதற்கிடையே துபாயில் பணியாற்றி வந்த தமிழகத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் சிறப்பு விமானம் மூலம் தமிழகம் அழைத்து வரப்பட்டனர். கடந்த 4ம் தேதி மதுரைக்கு 179 பேர் தனி விமானத்தில் அழைத்து வரப்பட்டனர். இவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் கொரானா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 2 பேர், புதுக்கோட்டை, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து 4 பேரும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

Related Stories: