8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு: சேலம் குப்பனூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

சேலம்: சேலம்-சென்னை இடையே 8 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என மத்திய அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. இதனை கண்டித்து 8 வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் மீண்டும் போராட்ட களத்தில் இறங்கி உள்ளனர். சேலம் பூலாவரியில் நேற்று வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் 2வது நாளாக இன்று சேலம் குப்பனூர் அருகே உள்ள சீரிக்காட்டில் 8வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக போராடும் விவசாயிகள் ஒன்றிணைந்து விளைநிலங்களில் கோரிக்கை அட்டைகள் ஏந்தியும்,

கருப்புக்கொடி ஏந்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுபற்றி விவசாயிகள் கூறுகையில், விளைநிலங்களை அழிக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பில் தெளிவாக  எடுத்துரைத்துள்ளது. இருப்பினும் மத்திய,மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து விவசாயத்தை அழிக்க முடிவு செய்துள்ளனர். இதனை கண்டிக்கிறோம். விளைநிலங்களை அழித்து 8 வழிச்சாலை அமைக்க ஒருபோதும் விடமாட்டோம், என்றனர்.

Related Stories: