×

குற்றாலத்தில் மெல்லிய சாரல்: மெயினருவி, ஐந்தருவியில் தண்ணீர் விழுகிறது

தென்காசி: குற்றாலத்தில் கடந்த மூன்று தினங்களாக சீசன் அறிகுறி தென்பட்ட நிலையில் இன்று காலை மெயின் அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் தண்ணீர் விழத் தொடங்கியது. குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் சீசன் காலமாகும். இந்த சீசன் காலத்தில் இதமான தென்றல் காற்று, லேசான வெயில், அவ்வப்போது வந்து செல்லும் மேகக்கூட்டம், இடையிடையே பொழியும் மெல்லிய சாரல், அருவிகளில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீர், களைகட்டி கட்டி காணப்படும். சுற்றுலா பயணிகள் கூட்டம் ஆகியவற்றை காணமுடியும்.

இந்த ஆண்டு வானிலை ஆய்வு மையம் ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கும் என்று அறிவித்திருந்த நிலையில், கடந்த சில தினங்களாக இதமான காற்று, மெல்லிய சாரல் என குற்றாலத்தில் சீசன் துவங்குவதற்கான அறிகுறிகள் தென்பட்டது. இருப்பினும் அருவிகளில் தண்ணீர் விழுந்தால்தான் சீசன் துவங்கியதாக அர்த்தம். அந்த வகையில் இன்று காலை முதல் மெயின் அருவி ஐந்தருவி ஆகியவற்றில் தண்ணீர் விழத் தொடங்கியது. மெயினருவியில் ஆண்கள் பகுதியில் ஓரளவு நன்றாகவும் பெண்கள் பகுதியில் குறைவாகவும் தண்ணீர் விழுந்தது.

ஐந்தருவியில் நான்கு பிரிவுகளில் தண்ணீர் விழத் துவங்கியுள்ளது. இன்று மேலும் சாரல் இருக்குமேயானால் அருவிகளில் தண்ணீர் நன்றாக விழத்துவங்கும். அத்துடன் சீசனும் துவங்கிவிடும். ஆனால் இந்த ஆண்டு வரலாற்றில் இல்லாத வகையில் நோய் தொற்று காரணமாக குற்றாலம் சீசனில் குளிக்க தடை உள்ளது குறிப்பிடத்தக்கது.



Tags : stream ,Courtallam: Water falls ,sarel ,Courtallam , Courtallam, thin sarel
× RELATED விமானத்தில் பயணம் செய்த மாநகராட்சி பள்ளி மாணவர்கள்