சாராயம் விற்ற 410 பேர் கைது: 8367 மதுபாட்டில் பறிமுதல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஆந்திர எல்லையில் உள்ளதால் அங்கு கள்ளச்சாராயம் காய்ச்சி அங்குள்ள கிராமங்களில் விற்கப்பட்டு வந்தது. இதையடுத்து எஸ்.பி. அரவிந்தன் உத்தரவின்பேரில், போலீசார் கடந்த மே மாதம் நடத்திய சோதனையில் 567 லிட்டர் கள்ளச் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, 410 பேரை போலீசார் கைது செய்தனர். சோதனையில், மேலும் 8,367 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், மது பாட்டில்கள் கடத்த பயன்படுத்திய, 122 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Advertising
Advertising

எஸ்.பி.எச்சரிக்கை

எஸ்.பி. அரவிந்தன் கூறுகையில், ஊரடங்கால் டாஸ்மாக் மூடப்பட்டதால் சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சினர். கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பவர்கள் யாராக இருந்தாலும், இனி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவர் என்றார்.

Related Stories: