×

அரசியல், சமூகம், தமிழ்ப்பற்று, தமிழ்நாட்டு உரிமைக்கு வழிகாட்டும் தலைவராக வாழ்ந்தவர் காயிதே மில்லத்: மு.க.ஸ்டாலின் புகழாரம்

சென்னை: திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது: கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத்தின் 125வது பிறந்தநாள் இன்று (நேற்று). காயிதே மில்லத் என்றால் வழிகாட்டும் தலைவர் என்று பொருள். அரசியல், சமூகம், தமிழ்ப்பற்று, தமிழ்நாட்டு உரிமை ஆகிய அனைத்துக்கும் வழிகாட்டும் தலைவராக வாழ்ந்தவர் அவர். மக்களவை, மாநிலங்களவை, தமிழக சட்டமன்றம் என அனைத்திலும் உறுப்பினராக இருந்து மக்கள் தொண்டாற்றியவர்.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகிய மூவருடனும் அன்பும் கொள்கையும் கலந்த நட்புடன் இருந்தவர். 1967 தேர்தலில் திமுக ஆட்சி அமைக்க பேரறிஞர் அண்ணாவுக்கு தோள் கொடுத்த தோழர். இசுலாம் என் மதம், தமிழ் என் தாய்மொழி என்ற கொள்கைப்படி இறுதிவரை வாழ்ந்தவர். காயிதே மில்லத் கட்டிக்காத்த மதநல்லிணக்கம்-சிறுபான்மையினர் நலன் - மொழிப்பற்று - இனப்பற்று கொண்டவர்களாக நாம் அனைவரும் செயல்படுவோம். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Tags : KAIDE MILAT: Political, Social ,Gayette Millet ,Rights Leader ,MK Stalin , Gayette Millet, MK Stalin, Hon
× RELATED தந்தை இறந்த சோகத்திலும் 10ம் வகுப்பில் சாதித்த மாணவி: குவியும் பாராட்டுகள்