நன்னடத்தை மீறிய ரவுடிக்கு 254 நாள் சிறை

திருவள்ளூர்: திருவள்ளூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நேதாஜி சாலை, பொன்னப்பன் தெருவை சேர்ந்தவர் ஐயப்பன் (25). இவர் மீது திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் 5 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. எனவே ரவுடி ஐயப்பனை கைது செய்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் போலீசார் அடைத்தனர். ஜாமீனில் வெளியில் வந்த  ரவுடி ஐயப்பன், சில தினங்களுக்கு முன்பு திருவள்ளூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 2 குற்ற வழக்குகளில் ஈடுபட்டார்.

Advertising
Advertising

இதுகுறித்த புகாரின்பேரில், ரவுடி ஐயப்பனின் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் அவர் குற்றச் செயலில் ஈடுபட்டதால், வரும் 13.03.2021 வரை 254 நாட்கள் புழல் சிறையில் அடைக்க திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட ரவுடி ஐயப்பனை போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.  

Related Stories: