நிலப்பிரச்னையில் விபரீதம் மருமகனுக்கு சரமாரி வெட்டு: மாமனார் உட்பட 3 பேர் கைது

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அடுத்த முக்கரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (50).  இவருக்கு கற்பகம் (45), புஷ்பா (38)  என 2 மனைவிகள் உள்ளனர். இதில், முதல் மனைவி கற்பகத்திற்கு ஏற்கனவே இரண்டே முக்கால் சென்ட் நிலத்தை எழுதி கொடுத்துவிட்டு, சேகர் 2வது மனைவி புஷ்பாவுடன் குடும்பம் நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கற்பகமும், அவரது மருமகன் காளிதாசும் வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டி அடிமனை போட்டுள்ளனர். இதையறிந்த சேகர், “வீடு கட்டுவதற்காக தோண்டிய பள்ளத்தை மூடி இந்த இடத்தில் நீங்கள் எப்படி வீடு கட்டலாம். இங்கு 6 சென்ட் நிலம் உள்ளது. இது எனக்குதான் சொந்தம்” என கூறி வாக்குவாதம் செய்தார். அப்போது, புஷ்பா சேகரிடம் வாக்குவாதம் செய்தார். வாக்குவாதம் முற்றி கைக்கலப்பானது. இருதரப்பினரும் கத்தி, உருட்டு கட்டைகளால் சரமாரியாக தாக்கிக்கொண்டனர்.

Advertising
Advertising

 இதில், சேகருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அப்போது, எதிர்பாராத நேரத்தில் சேகர், மருமகன் காளிதாசை கத்தியால் தலையில் சரமாரியாக வெட்டினார். இதில், தலையில் படுகாயமடைந்த  காளிதாஸ் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து இருதரப்பினரும் ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில், எஸ்.ஐ.ராக்கிகுமாரி இதுகுறித்து வழக்கு பதிவு செய்து சேகர், புஷ்பா, கற்பகம் ஆகியோரை கைது செய்து ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் சிறையில் அடைத்தனர்.

Related Stories: