6 வயது மகளுக்கு பாலியல் தொல்லை: கொடூர தந்தை கைது

பெரம்பூர்: பெரம்பூரை சேர்ந்த 61 வயது பெண்ணுக்கு இரண்டு பெண்  மற்றும் ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இதில், மூத்த மகள் கடந்த 10 வருடங்களாக ஐதராபாத்தில் கணவர் பிரேம்குமாருடன் (39) வசித்து வந்தார். கடந்த  மார்ச் மாதம் உடல் நலக்குறைவால் ஐதராபாத்தில் பிரேம்குமாரின் மனைவி இறந்ததால், அவரது உடலை பிரேம்குமார் சென்னைக்கு கொண்டு வந்து அடக்கம் செய்தார். அதன் பிறகு பிரேம்குமார் தனது 2 பெண் குழந்தைகளுடன் பெரம்பூரில் உள்ள மாமியார் வீட்டின் முதல் மாடியில் வசித்து வந்தார்.

Advertising
Advertising

 இந்நிலையில்,  கடந்த சில நாட்களுக்கு முன்பு, பிரேம்குமாரின்  இரண்டாவது மகளான 6 வயது சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.  இதனால், சிறுமியின் பாட்டி அவளை தனியார் மருத்துவமனைக்கு  அழைத்து சென்றார்.

 அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமியின் பிறப்புறுப்பில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறினர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பாட்டி, சிறுமியிடம் விசாரித்தபோது, தந்தை பிரேம்குமார் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறினாள்.

இதையடுத்து, புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பாட்டி புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் பிரேம்குமாரை கைது செய்து போக்சோ சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

Related Stories: