×

மகாராஷ்டிராவில் பாதிப்பு 80,000-ஐ தாண்டியது: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.36 லட்சமாக உயர்வு; 6642 பேர் பலி

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 36 ஆயிரத்தை தாண்டியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ்   இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,36,657 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24  மணிநேரத்தில் மட்டும் 9887 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 294 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை  6642 பேர் உயிரிழந்த நிலையில்,1,15,942 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 80,229 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 2849 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 35,156 பேர்    குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 28,694 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை    232 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 15,762 பேர் குணமடைந்துள்ளனர். டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 26,334 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு,   708 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 10,315 பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


மாநில வாரியாக விவரம்:

அசாமில் 2153 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 498 பேர் குணமடைந்தது.
பீகாரில் 4596 பேருக்கு பாதிப்பு; 29 பேர் பலி; 2225 பேர் குணமடைந்தது.
சண்டிகரில் 304 பேருக்கு பாதிப்பு; 5 பேர் பலி; 222 பேர் குணமடைந்தது.
சத்தீஸ்கரில் 879 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 244 பேர் குணமடைந்தது.

கோவாவில் 196 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 65 பேர் குணமடைந்தது.
குஜராத்தில் 19,094 பேருக்கு பாதிப்பு; 1190 பேர் பலி; 13,003 பேர் குணமடைந்தது.
அரியானாவில் 3597 பேருக்கு பாதிப்பு; 24 பேர் பலி; 2134 பேர் குணமடைந்தது.
திரிபுராவில் 692 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 173 பேர் குணமடைந்தது.

கேரளாவில் 1699 பேருக்கு பாதிப்பு; 14 பேர் பலி; 712 பேர் குணமடைந்தது.
ராஜஸ்தானில் 10084 பேருக்கு பாதிப்பு; 218 பேர் பலி; 7359 பேர் குணமடைந்தது.
ஜார்கண்டில் 881 பேருக்கு பாதிப்பு; 7 பேர் பலி; 410 பேர் குணமடைந்தது.
லடாக்கில் 97 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 48 பேர் குணமடைந்தது.

மணிப்பூரில் 132 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 41 பேர் குணமடைந்தது.
மேகலாயாவில் 33 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 13 பேர் குணமடைந்தது.
மிஸ்ரோமில் 22 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.
ஒடிசாவில் 2608 பேருக்கு பாதிப்பு; 8 பேர் பலி; 1604 பேர் குணமடைந்தது.

பாணடிச்சேரி 99 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 36 பேர் குணமடைந்தது.
பாஞ்சாப்பில் 2461 பேருக்கு பாதிப்பு; 48 பேர் பலி; 2069 பேர் குணமடைந்தது.
உத்தரகாண்ட்டில் 1215 பேருக்கு பாதிப்பு; 11 பேர் பலி; 344 பேர் குணமடைந்தது.
கர்நாடகாவில் 4835 பேருக்கு பாதிப்பு; 57 பேர் பலி; 1688 பேர் குணமடைந்தது.

ஜம்மு காஷ்மீரில் 3324 பேருக்கு பாதிப்பு; 36 பேர் பலி; 1086 பேர் குணமடைந்தது.
தெலுங்கானாவில் 3290 பேருக்கு பாதிப்பு; 113 பேர் பலி; 1627 பேர் குணமடைந்தது.
மேற்கு வங்கத்தில் 7303 பேருக்கு பாதிப்பு; 366 பேர் பலி; 2912 பேர் குணமடைந்தது.
உத்தரப்பிரதேசத்தில் 9733 பேருக்கு பாதிப்பு; 257 பேர் பலி; 5648 பேர் குணமடைந்தது.

ஆந்திரப்பிரதேசத்தில் 4303 பேருக்கு பாதிப்பு; 73 பேர் பலி; 2576 பேர் குணமடைந்தது.
அருணாச்சலப்பிரதேசத்தில் 45 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.
மத்தியப்பிரதேசத்தில் 8996 பேருக்கு பாதிப்பு; 384 பேர் பலி; 5878 பேர் குணமடைந்தது.
இமாச்சலப்பிரதேசத்தில் 393 பேருக்கு பாதிப்பு; 5 பேர் பலி; 189 பேர் குணமடைந்தது.

அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 33 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 33 பேர் குணமடைந்தது.
தாதர் நகர் ஹவேலியில் 14 பேருக்கு பாதிப்பு; 1 குணமடைந்துள்ளார். யாரும் உயிரிழக்கவில்லை.
சிக்கிமில் 3 பேருக்கு பாதிப்பு; யாரும் குணமடையவில்லை; உயிரிழக்கவில்லை.



Tags : Maharashtra , In Maharashtra, the number of casualties exceeds 80,000; 6642 killed
× RELATED மகாராஷ்டிராவின் அகமத்நகர்...