அமெரிக்காவில் காந்தி சிலை சேதம் குடியரசு கட்சி கடும் கண்டனம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு ஆளும் குடியரசு கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் மின்சோட்டா மாகாணத்தில் மின்னியாபோலிஸ் நகரில் கருப்பர் இனத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட், போலீசாரால் கழுத்தில் மிதிக்கப்பட்டு இறந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா முழுவதும் பல்வேறு நகரங்களில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே, வாஷிங்டனில் இந்திய தூதரகத்தின் முன்பு நிறுவப்பட்டுள்ள மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்திற்காக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென் ஜஸ்டர் நேற்று முன்தினம் மன்னிப்பு கோரினார். இந்த சிலை கடந்த 2000ம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் வாஜ்பாய் தலமையிலான ஆட்சியில், வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் நிறுவப்பட்டது. இந்நிலையில், சிலை சேதம் குறித்து அமெரிக்காவின் ஆளும் குடியரசுக் கட்சியினர் கடும் அதிருப்தியும், கண்டனமும் தெரிவித்துள்ளனர்.

Advertising
Advertising

இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், இந்திய தூதரகத்தில் உள்ள காந்தி சிலை சேதப்படுப்பட்டதற்கும் பிளாய்ட் இறப்புக்கு எதிரான போராட்டத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. தனது அகிம்சை போராட்டத்தின் மூலம் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்பதை நிருபித்தவர் மகாத்மா காந்தி. எனவே, வன்முறை, கலவரம், போராட்டங்கள் நம்மை ஒருங்கிணைக்காது, என்றனர். மேலும் அவர்கள், ``இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறோம். இது தொடர்பாக உள்ளூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: