சி ல் லி பா யி ன் ட்...

* 100 கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று இந்திய டென்னிஸ் நட்சத்திரம் லியாண்டர் பயஸ் விருப்பம் தெரிவித்துள்ளார். இந்த சாதனை மைல்கல்லை எட்ட அவருக்கு இன்னும் 3 போட்டிகளே தேவை. மேலும், 8வது முறையாக ஒலிம்பிக் போட்டியில் விளையாடி சாதனை படைக்கும் வாய்ப்பும் அவருக்கு உள்ளது.

* இன்ஸ்டாகிராமில் அதிகம் சம்பாதிக்கும் டாப் 10 விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோஹ்லி 6வது இடம் பிடித்துள்ளார். கால்பந்து நட்சத்திரங்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுகல்), லியோனல் மெஸ்ஸி (அர்ஜென்டினா), நெய்மர் (பிரேசில்) ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனர்.

* கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சையால் 3 ஆண்டு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து பாகிஸ்தான் பேட்ஸ்மேன் உமர் அக்மல் செய்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை ஜூன் 11ம் தேதி நடைபெற உள்ளது.

Related Stories: