×

6 வாரத்தில் 6ம் முறையாக பங்குகளை விற்றது ஜியோ: 1.85 சதவீதத்தை வாங்கியது முபாதலா

புதுடெல்லி: ரிலையன்ஸ் ஜியோ தொலைதொடர்பு நிறுவனத்தில் ரூ.9,093 கோடி முதலீடு செய்ய அபுதாபியின் முபாதலா நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இது கடந்த 6 வாரத்தில் ரிலையன்ஸ் மேற்கொள்ளும் 6வது ஒப்பந்தமாகும். கொரோனா விவகாரத்தால் சீனாவை தவிர்க்கும் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன. இதனால், இந்திய நிறுவனங்கள் குறிப்பாக ரிலையன்ஸ் அதிக பலனை சந்தித்து வருகிறது. இதுவரை ரிலையன்ஸ் நிறுவனத்தில் பேஸ்புக், சில்வர் லேக், விஸ்டா ஈக்கியூட்டி பார்ட்னர்ஸ், ஜெனரல் அட்லாண்டிக், கேகேஆர் நிறுவனங்கள் முதலீடு செய்தன.

அந்த வரிசையில் தற்போது அபுதாபியின் முபாதலா முதலீட்டு நிறுவனமும் இணைந்துள்ளது. இந்நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ பிளாட்பார்மில் ரூ.9,093.60 கோடி மதிப்பிலான 1.85 சதவீத பங்குகளை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இது கடந்த 6 வாரத்தில் ரிலையன்சின் 6வது ஒப்பந்தமாகும். இதன் மூலம் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.87,655.35 கோடி அந்நிய முதலீட்டை ஈர்த்துள்ளது. இதில் அதிகபட்சமாக பேஸ்புக் ரூ.43,574 கோடி மதிப்பிலான 9.99 சதவீத பங்குகளை வாங்குகிறது.



Tags : Shares, Jio sold 1.85%, 6 weeks
× RELATED அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு