மகாராஷ்ட்ராவை மிரட்டும் கொரோனா; பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 139 பேர் உயிரிழப்பு...சுகாதாரத்துறை

மும்பை: நாட்டிலேயே மராட்டியத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. இங்கு நோய் தொற்று அசுர வேகத்தில் பரவி வருகிறது. தலைநகர் மும்பையிலும் நோய் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் உயிரிழப்புகளும் கூடி கொண்டே வருகிறது. இந்தநிலையில் மராட்டிய மாநில சுகாதாரத் துறை அளித்த தகவலின்படி, மராட்டியத்தில் கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 139 பேர் உயிரிழந்தனர். மராட்டியத்தில் ஒரே நாளில் 2,436 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு 80,229 ஆக உயர்ந்தது. இதுவரை 2,849 பேர் பலியாகியுள்ளனர்.

அதே போல 35,156 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மராட்டியத்தில் மேலும் 4 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மராட்டிய காவல்துறை தரப்பில் கூறியிருப்பதாவது:- மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 4 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஒரு போலீசார் பலியானார். இத்துடன் ஒட்டுமொத்தமாக பாதிப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 2,561 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 31 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: