×

பயணிகள் இன்றி வெறிச்சோடிய புதிய பஸ் நிலையம்: கூட்டமின்றி காற்று வாங்கும் அரசு பஸ்கள்

நெல்லை: நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இன்று காலை பயணிகள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டதால் அரசு பஸ்கள் காற்று வாங்கின. வழக்கம்போல் தென்காசி, தூத்துக்குடி, நாகர்கோவில் வழித்தடங்களில் பயணிகள் கூட்டம் காணப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மார்ச் 24ம்தேதி தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 2 மாதங்களுக்கு மேலாக 4 கட்டங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில் ஜூன் 30ம்தேதிவரை 5ம் கட்ட ஊரடங்கை மத்திய, மாநில அரசுகள் அறிவித்தன.

இதையடுத்து 5ம் கட்ட ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதில் கடந்த 2 மாதங்களாக முடங்கி கிடந்த பஸ்களை கொரோனா பாதிப்பு இல்லா மாவட்டங்களில் 50 சதவீதம் இயக்க அரசு உத்தரவிட்டது. இதன்படி அரசு போக்குவரத்து கழகம் நெல்லை கோட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஜூன் 1ம்தேதி முதல் பஸ்கள் இயக்கப்பட்டன. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜூன் 2ம்தேதி முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கை பின்பற்றி பஸ்கள் இயக்கப்பட்டன. நெல்லை, தென்காசி, பாபநாசம், தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி வழித்தடத்தில் அரசு பணியாளர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள் என பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டு வந்தது.

மாநகர பஸ்களிலும், கிராமபுற பஸ்களிலும் பயணிகள் கூட்டமின்றி காணப்படுகிறது. பயணிகள் முககவசங்கள் அணிந்து வந்தாலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் ‘பழைய குருடி கதவை திரடி’ என்ற பழமொழிக்கு ஏற்ப தூத்துக்குடி, தென்காசி, திருச்செந்தூர் வழித்தடத்தில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. கோயில் கொடைவிழா, திருமணங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இல்லாத காரணத்தாலும், பொதுமக்களிடம் பண புழக்கம் இல்லாததாலும் மாநகர, கிராம பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்களில் பயணிகள் கூட்டமின்றி காணப்படுகின்றன.

வழக்கமாக கூட்டம் அதிகளவு காணப்படும் நாகர்கோவில், தூத்துக்குடி, தென்காசி வழித்தடத்தில் கூட இன்று வெள்ளிக்கிழமை புதிய பஸ்நிலையத்தில் பெரும்பாலான பஸ்களில் கூட்டம் இன்றி காணப்பட்டது. நாகர்கோவில் வழித்தடத்தில் மட்டும் பயணிகளின் முழு தகவல்களை பெற்றபின் பஸ்களில் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

Tags : bus station ,passengers , New bus station, government buses
× RELATED அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே...