×

காஷ்மீரில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் மதியழகன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம்; முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை: காஷ்மீரில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் மதியழகன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். பாகிஸ்தான் தாக்குதலில் வீரமரணம் அடைந்த மதியழகன் சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்தவர் ஆவார். காஷ்மீரில் உள்ள கிராமங்களையும், வீரர்களையும் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தும் சம்பவங்கள், அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தின் சந்தெர்பானி எல்லைப்பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் ராணுவம் நேற்று துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. இதனை அடுத்து, இந்திய தரப்பில் இருந்து தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. சில மணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கிச்சூட்டில் ஹவில்தார் மதியழகன் படுகாயம் அடைந்தார். இதனை அடுத்து, அவர் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஹவில்தார் மதியழகன் சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகாவில் உள்ள ஸ்ரீரங்காய் காடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

இந்நிலையில் காஷ்மீர் துப்பாக்கிச்சண்டையில் வீரமரணம் அடைந்த தமிழகத்தின் சேலத்தை சேர்ந்த மதியழகன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். பாகிஸ்தான் ராணுவத்துடனான துப்பாக்கிச்சண்டையில் தியாக உணர்வோடு செயல்பட்டு வீரமரணம் அடைந்த மதியழகனுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பழனிசாமி, அவரது குடும்பத்தினரை மாவட்ட கலெக்டர் நேரில் சந்தித்து ஆறுதல் கூற உத்தரவிட்டுள்ளார்.

Tags : Family Announcement ,Palanisamy ,Madhyalakaran ,Chief Minister , Kashmir, heroic death, Tamil Nadu warrior, midwife, relief, chief minister Palanisamy
× RELATED கொரோனா தொற்று தமிழகத்தில் சமூகப்...