×

திண்டிவனத்தில் பயணிகள் ஆர்வம் இல்லாததால் பேருந்து இயக்கம் மந்தம்

திண்டிவனம்: திண்டிவனத்தில் பயணிகள் வருகை இல்லாததால் பேருந்து இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவின் பிடியில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது நாளடைவில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கட்டுப்பாடுகளுடன் அரசு பேருந்துகளை இயக்க அரசு உத்தரவிட்டிருந்தது. பேருந்துகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சானிடைசர், முக கவசம் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளி கடைப்பிடிப்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் பேருந்துகள் இயக்கப்பட்டது.

திண்டிவனம் தற்காலிக பேருந்து நிலையமான மேம்பாலத்தின் கீழ் பகுதியில் அரசு பேருந்துகள் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்வது வழக்கம். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பொதுமக்கள் பேருந்தில் பயணிக்க அச்சப்படுகின்றனர். இதனால் திண்டிவனம் மேம்பாலம் கீழ் பகுதியில் ஒரு சில பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. அதுவும் பயணிகள் இல்லாமல் காலியாக சென்று வருகிறது. எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் திண்டிவனம் பகுதி தற்போது பயணிகள் வருகை இல்லாததால் வெறிச்சோடி காணப்படுகிறது.

Tags : Passengers ,Tindivanam , Tindivanam, bus movement, slowdown
× RELATED கள்ளக்குறிச்சியில் நின்று...