×

சேலம் எட்டுவழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தீவிரம்.: விளைநிலங்களில் இறங்கி மத்திய அரசுக்கு எதிராக முழக்கம்

சேலம்: சேலம்-சென்னை இடையே எட்டுவழிச்சாலை திட்டத்தை செயல் படுத்த தீவிரம் காட்டும் மத்திய அரசை கண்டித்து சேலத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். எட்டுவழிச்சாலை திட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையே நீக்கக்கோரி தமிழக அரசு மற்றும் மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகள் ஓராண்டாக நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் இந்த வழக்குகளை விரைந்து விசாரிக்க கோரி மத்திய அரசு சார்பில் நேற்று ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அரசின் இந்த செயலை கண்டித்து சேலத்தில் விவசாயிகள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனிடையே எட்டுவழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் கோபியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

எட்டுவழிச்சாலை திட்டத்துக்கு வெட்டப்படும் மரங்களுக்கு பதிலாக இரண்டு மடங்கு மரங்கள் நடப்படும் என்று அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் தெரிவித்துள்ளார். எட்டுவழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் மீண்டும் தீவிரம் கட்ட தொடங்கி இருப்பதும் சேலம் மாவட்ட விவசாயிகளை கவலையில் ஆழ்த்தி உள்ளது.

Tags : government ,Salem Eight Road Project of Central Government Intensifies Implementation ,implementation , Central ,government ,Salem Eight Road ,
× RELATED பணியிடங்களில் பெண்களை பாதுகாக்கும்...