×

மும்பையில் குறைந்துள்ள தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம்: மும்பை மாநகராட்சி தகவல்

மும்பை: இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளதாக பிரஹன் மும்பை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் உறுதி செய்யப்படும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகளில் 20 சதவீத பாதிப்பு மும்பையில் உள்ளது. அந்நகரம் ஒவ்வொரு நாளும் சுமார் 4,000 கொரோனா மாதிரிகளை சோதித்து வருகிறது. ஆனால், இந்த எண்ணிக்கை இப்போது ஒரு மாதத்திற்கும் மேலாக அதிகரிக்கவில்லை, என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மும்பை மாநகராட்சி மிகவும் அதிகமான சோதனைகளை நடத்தி வருகிறது. அதில் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ள நபர்களின் சோதனைக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களின் முதன்மை தொடர்புகள், அறிகுறிகளைக் காண்பிப்பவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் போன்றவர்கள் ஆவார்கள். நடத்தப்படும் ஒவ்வொரு மூன்று சோதனைகளுக்கும் மும்பை குறைந்தது ஒரு கொரோனா பாதிப்பை கண்டுபிடித்து வருகிறது. அதே நேரத்தில் தேசிய அளவில் இந்த எண்ணிக்கை இருபதுகளில் ஒன்றாகும். பெரும்பாலான பிற மாநிலங்களும் தேசிய எண்ணைப் போன்ற ஒரு நேர்மறை விகிதத்தைக் கொண்டுள்ளன. மட்டுப்படுத்தப்பட்ட சோதனை உள்கட்டமைப்பை மிகச் சிறப்பாகப் பயன்படுத்துவதாக மும்பை சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர். ஜூன் 2ம் தேதி வரையிலான தரவுகளின்படி, கோவிட்-19 பாதிப்பின் சராசரி தினசரி வளர்ச்சி சில நாட்களுக்கு முன்பு 8 சதவீதத்திலிருந்து 3.64 சதவீதமாக குறைந்துள்ளது என்று பிரஹன் மும்பை மாநகராட்சி (BMC) உயர் அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags : Mumbai ,COVID ,BMC , Mumbai, Corona, Corporation, Maharashtra
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 455...