×

தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் உண்ணாவிரதம்.: மத்திய அரசு விசாயிகளை வஞ்சிப்பதாக குற்றச்சாட்டு

தஞ்சாவூர்: இலவச மின்சாரத்தை ரத்து செய்ய வகை செய்யும் புதிய மின்சார சீர்திருத்த சட்ட வரைவு மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற கோரி விவசாயிகள் பல இடங்களில் போராட்டம் நடத்தினர். தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மன்னார்குடியில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர். தருமபுரியில் கூட்டு சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கருப்புக்கொடியுடன் கலந்துக்கொண்டனர். விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ஒரு போதும் ரத்து செய்ய கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

இதேபோல் வேலூர் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். காரைக்காலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். தமிழகத்தில் இலவச மின்சாரம் தொடங்க வேண்டும் ஆனால்  புதிய மின்சார சீர்த்திருத்தத்தை சட்ட வரைவு  மத்திய அரசு திரும்ப பெறவேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை ஆகும்.


Tags : government ,places ,Thanjavur ,Central , Farmers, Thanjavur , places, Central government ,
× RELATED தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் 4,021...