சூப்பர் ஹீரோ!

நன்றி குங்குமம் முத்தாரம்

Advertising
Advertising

நவீனமாக வடிவமைக்கப்பட்ட கவச உடைகளை அணிந்துகொண்டுதான் சூப்பர் ஹீரோக்கள் வலம் வருவார்கள் என்றில்லை. சாதாரண டி-ஷர்ட், ஷார்ட்ஸ் அணிந்துகொண்டும் சூப்பர் ஹீரோக்கள் மக்களைக் காக்க வருவார்கள். அதற்கு உதாரணம் இந்தச் சம்பவம். இங்கிலாந்தின் கிரிம்ஸ்பி நகரில் உள்ளது வெஸ்டர்ன் தொடக்கப் பள்ளி. அங்கே பயிலும் 41 சதவீத மாணவர்களின் குடும்பம் ஏழ்மையில் வாடுகிறது. அதனால் அந்த மாணவர்கள் பள்ளியில் வழங்கப்படும் இலவச மதிய உணவை நம்பியே தங்களின் பசியைப் போக்கிவந்தனர்.

கொரோனாவின் ஊரடங்கிறகு கிரிம்ஸ்பி நகரும் தப்பவில்லை. மாணவர்களின் குடும்பச் சூழலை நன்கு தெரிந்தவர் உதவி தலைமை ஆசிரியர் ஜேன். அதனால் ஊரடங்கு காலத்திலும் பள்ளியில் இலவச உணவு சமைக்கப்பட்டது. அந்த உணவை ஒவ்வொரு மாணவரின் வீட்டுக்கும் எடுத்துக்கொண்டுபோய் தந்திருக்கிறார் ஜேன். இதற்காக தினமும் 18 கிலோ உணவு பண்டலை சுமந்துகொண்டு ஐந்து கிலோ மீட்டர் தூரம் நடந்திருக்கிறார். ஜேனை ‘சூப்பர் ஹீரோ’ என்று புகழ்ந்து தள்ளுகின்றனர் கிரிம்ஸ்பி நகரவாசிகள்.

Related Stories: