×

குமரி மாவட்டத்திற்கு வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை.:சோதனைச் சாவடியில் ரத்தம், சளி மாதிரி எடுக்க தாமதம் என புகார்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வரும் வெளியூர் பயணிகளை கொரோனா பரிசோதனை செய்வதற்கு பல மணி நேரம் தாமதமாகுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மற்ற மாவட்டங்களில் இருந்து சாலை மார்கமாக வரும் பயணிகள் ஆரல்வாய்மொழி மற்றும் காளியக்காவிலே உள்ளிட்ட சோதனை சாவடிகளில் கொரோனா பரிசோதனைக்காக ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் எடுக்கப்படுகிறது.

இதேபோல் நாகர்கோவில் ரயில் நிலையத்திலும் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக பல மணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளதால் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பயணிகளை கொரோனா பரிசோதனைக்காக ரத்த மாதிரி எடுப்பது போற்றவற்றிற்காக மூன்று மணி நேரம் வரை காத்திருக்கும் நிலை உள்ளது. பயணிகள் புறப்படும் இடத்திலேயே பரிசோதனை செய்யப்பட வேண்டும். இல்லை எனில் பரிசோதனை செய்வதற்கான பணியாளர்களை அதிக படுத்த வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கை ஆகும்.


Tags : district ,examination ,Kumari ,district residents ,checkpoint , Coronation, Kumari ,Complaint,taking , checkpoint
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு ஆயத்தம்...