×

திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்; வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் : மருத்துவமனை இயக்குனர் வேண்டுகோள்!!

சென்னை : திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று தனியார் மருத்துவமனை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

உடல்நலக்குறைவால் ஜெ.அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவும், திமுக சென்னை மேற்கு மாவட்ட செயலாளராகவும் உள்ள ஜெ.அன்பழகன் கடந்த சில நாட்களாக ஒன்றிணைவோம் என்ற திமுக திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.அவருக்கு தி.நகரில் உள்ள அவரது வீட்டில் சில நாட்களுக்கு முன்பு, திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. அதைதொடர்ந்து, அவர் சிகிச்சைக்காக குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முதல்வர், அமைச்சர்கள் நலம் விசாரிப்பு

இந்த நிலையில், திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி மருத்துவரிடம் கேட்டறிந்தனர். அதே போல் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை குரோம்பேட்டை மருத்துவமனைக்கு நேரில் சென்று ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார்.

மருத்துவமனை இயக்குனர் பேட்டி

இதன் பிறகு, ரேலா மருத்துவமனை இயக்குனர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ஜெ.அன்பழகன் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ஜெ.அன்பழகன் மருத்துவமனைக்கு வரும்போதே மூச்சுத்திணறல் இருந்தது என்றும்
அனைத்து வித உதவிகளையும் தருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது என்றும் மருத்துவர் குறிப்பிட்டார். மேலும் தேவையற்ற தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் மருத்துவமனை இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags : MLA ,DMK ,hospital director , DMK MLA. , J, use, health, improvement, vain rumors, do not believe, hospital, director, request
× RELATED தேர்தலில் பாஜவுக்கு மக்கள் தோல்வியை...