×

உலகை உலுக்கிய கேரள சம்பவம்: கர்ப்பிணி யானையை கொன்றவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விசாரிக்க குழுவை அமைத்தது NGTA

திருவனந்தபுரம்: கேரளாவில் கொல்லப்பட்ட யானையை கொன்றவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன ? என்பது குறித்து தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நிபுணர் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளார். கேரளாவில் அன்னாசி பழத்தில் வெடி வைத்து யானை கொல்லப்பட்டது தொடர்பாக தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்காக நீதிபதி ராமகிருஷ்ணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா ஆகியோர் கொண்ட நீதிமன்ற அமர்வு,   இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்ய கேரள வனத்துறையின் மூத்த அதிகாரி, அமைதிப் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா  அதிகாரி, பாலக்காடு மாவட்ட கலெக்டர் ஆகியோர் கொண்ட குழு அமைத்து உத்தரவிட்டனர்.

மனிதர்கள் - விலங்குகள்.மோதல் சம்பவங்களை தவிர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

மேற்கொண்டு இதுபோல் சம்பவங்கள் நிகழாமல் இருக்க  மேற்கொள்ள வேண்டியவை குறித்த திட்டம் குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேரள அரசிற்கு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டு வழக்கை அடுத்தகட்ட விசாரணைக்காக ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Tags : NGTA ,committee ,elephant killer ,Kerala , Kerala, pregnant elephant, killed, action, NGTA
× RELATED தனியார் கல்லூரி நிர்வாகங்கள் 25% வரை...