மாநிலங்களவை தேர்தலுக்காக ஆபரேஷன் தாமரை தொடங்கியதா?; குஜராத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா...!

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா செய்துள்ளார். குஜராத் மாநிலத்தில் 4 மாநிலங்களவை பதவிகள் காலியாகின்றன. இவற்றுக்கு வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  காலியாகும் அனைத்து பதவிகளையும் பாஜ தானே பெறுவதற்காக முயற்சி மேற்கொண்டிருப்பதாக நேற்று முன்தினம்தான் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியிருந்தன. இதற்காக எதிர்க்கட்சிகள் எம்எல்ஏ.க்களிடம் குதிரைப்பேரம் நடப்பதாகவும்  அவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.

இதற்கிடையே, அம்மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் அக்ஷ்ய் படேல் மற்றும் ஜித்து சவுத்ரி ஆகியோர் நேற்று முதல்வர் ரூபானியை சந்தித்து பேசினர். பின்னர் வெளியே வந்த அவர்கள், நேராக சட்டப்பேரவை சபாநாயகர்  ராஜேந்திரா திரிவேதியை சந்தித்து பேசினர். அதைத்தொடர்ந்து பேட்டி அளித்த அவர்கள், தங்களுடைய பதவியை ராஜினாமா செய்வதாகவம், அதற்கான கடிதத்தை சபாநாயகரிடம் அளித்ததாகவும் கூறினர். உடனடியாக சபாநாயகர் அவர்களது  ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். குஜராத்தில் நேற்று திடீரென 2 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்த நிலையில், இன்று மேலும் ஒரு காங்கிரஸ்  எம்எல்ஏ ராஜினாமா செய்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்பட்டுத்தியள்ளது. குஜராத்தில் மொத்தமுள்ள 182 சட்டசபை உறுப்பினர்களில், பாஜ.விற்கு 103 உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சிக்கு 68 உறுப்பினர்களும் உள்ளனர்.

 மாநிலங்களவை தேர்தலில் எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு முக்கியம் என்பதால் காங்கிரஸ் பலத்தை குறைக்க எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா படலம் அரசியல் முக்கியத்துவமாக பார்க்கப்படுவதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. மேலும், சில காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்வார்கள் என்று பாஜ தலைவர்கள் சிலர் தெரிவித்துள்ளது, அரசியல் வட்டாரத்தை பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கி உள்ளது. குஜராத்தில் ஆபரேஷன் தாமரை  தொடங்கியுள்ளதாக சிலர் தெரிவிக்கின்றனர்.

Related Stories: