வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; 10ம் தேதியில் இருந்து சென்னையில் மழை : வானிலை ஆய்வு மையம்!!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 8ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை நிலவரம் சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில்,

தென்மேற்கு பருவமழை அடுத்தவாரம் கேரளம், கர்நாடகத்தில் தீவிரமடையும்.நிசர்கா புயல் பலவீனமடைந்து காற்றழுத்த சுழற்சியாகி சிக்கிம் - பூடானை நோக்கி நகர்ந்து செல்கிறது.சிக்கிம் - பூடானை நோக்கி காற்றழுத்த சுழற்சி செல்வதால் மீண்டும் பருவமழை தீவிரமடைய வாய்ப்புள்ளது. ஜூன்.10ல் இருந்து 14 வரை கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. கேரளத்தின் வயநாட்டிலும் பலத்த மழை பெய்யும்.

அடுத்தவாரம் 10ம் தேதியில் இருந்து சென்னை, திருவள்ளூர், புதுச்சேரியில் வெப்பச் சலனத்தால் மழை பெய்யும். சென்னை, திருவள்ளூரில் மாலை அல்லது இரவில் இடியுடன் மழை பெய்யும்.ஜூன் 10ல் இருந்து 14 வரை நீலகிரி, கோவை உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்.வடக்கு அந்தமான் கடலில் அடுத்தவாரம் காற்றழுத்த சுழற்சி உருவாகி தீவிரமடைந்து, 9-10 ஆகிய தேதிகளில் ஒடிசா வரும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.   

மீனவர்களுக்கு எச்சரிக்கை

புதிய காற்றழுத்த பகுதி உருவாகயுள்ளதால், தென்கிழக்கு வங்கக் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.புதிய காற்றழுத்தம் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாக இருப்பதால் அந்தமான் கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்று என்ற காரணத்தால் மீனவர்கள்  இன்றும், நாளையும் தென்கிழக்கு வங்கக்கடலில் அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதி, மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: