×

கடன் தவணையை செலுத்த வங்கிகள் வலியுறுத்துவதாக புகார்.:மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை வழங்க கோரிக்கை

கிருஷ்ணகிரி: மத்திய அரசின் உத்தரவை மீறி மகளிர் சுய உதவிக்குழுக்கள் கடன் தவணையை செலுத்த வலியுறுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேர்பட்டி கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளியான ராஜேஸ்வரி என்பவர் பாதிக்கப்பட்டவர் ஆவர். இவரை கடன் தொகைக்கான தவணையை உடனடியாக செலுத்துமாறு வங்கிகள் கட்டாயப்படுத்துவதாக கூறப்படுகிறது.

ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக தொழிற்சாலைகள் செயல்படாததால் வேலையின்றி தவித்து வருவதாகவும், வங்கிகள் கடன் வசூலிப்பதால் மனஉளைச்சலுக்கு ஆளாகுவதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகையும் கடந்த 3 மாதங்களாக வழங்கவில்லை என்று ராஜேஸ்வரி குற்றம் சாட்டியுள்ளார். எனவே வங்கிகளின் கட்டாய கடன் வசூலை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


Tags : banks , Complaint , banks , paying ,installments
× RELATED சமூகவலைதளத்தில் அவதூறு : நடிகை வனிதா புகார்