×

ஆரோக்கிய சேது செயலி பாதுகாப்பற்றதா?

மத்திய அரசு வெளியிட்டிருக்கும் சமஸ்கிருத மொழியில் ‘உடல்நலத்திற்கான பாலம்’ எனப்படும் ‘ஆரோக்கிய சேது’ (Aarogya Setu) என்னும் பெயர் கொண்ட செயலி, ப்ளூடூத் மற்றும் லொகேஷனை வைத்து பயன்பாட்டாளர் இருக்கும் பகுதி கோவிட்-19 தொற்று உள்ள பகுதியா இல்லையா என்பதை கண்டறியும். நோய் இருப்பவர்களின் தகவலை ஆராய்ந்து பார்த்து அவர்களில் யாரேனும் இந்த செயலியை பயன்படுத்தும் நபர் இருக்கும் அதே பகுதியில் உள்ளனரா என ஆராயும். இந்த செயலி உங்களிடம் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளித்து உங்களுக்கு கொரோனா தொற்றுக்கு உள்ளாக எவ்வளவு வாய்ப்பு உள்ளது என்பதை நீங்கள் அறிய முடியும். இந்த சோதனையைப் பயன்பாட்டாளர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை செய்துகொள்ள முடியும். கோவிட்-19 தொற்று ஏற்பட பயன்பாட்டாளருக்கு வாய்ப்புகள் அதிகமாக இருந்தால், அவரை உடனடியாக மருத்துவ சேவையை நாட ‘ஆரோக்கிய சேது’ செயலி அறிவுறுத்தும். இதைப் பயன்படுத்த செல்பேசியில் பதிவிறக்கம் செய்துகொண்ட பின், உங்கள் செல்பேசி எண்ணை இதில் பதிவு செய்யவேண்டும்.

இதை பயன்படுத்துபவருக்கு தொற்று பரவியிருந்தால் அல்லது அருகிலிருக்கும் யாருக்காவது தொற்று இருந்தால் அவர்களைப் பற்றிய தகவலை இந்த செயலி அரசுக்குத் தெரியப்படுத்தும். இந்தியாவில் செயல்படும் இன்டர்நெட் ஃப்ரீடம் ஃபவுண்டேஷன் எனும் இணையதள சேவை உரிமைகளுக்கான அமைப்பு சர்வதேச அளவிலான அந்தரங்க உரிமை விதிகளுக்கு ஏற்ப இந்த செயலி இல்லை என்று கூறுகிறது. தனிநபர் குறித்த தரவுகள் இந்திய அரசின் எந்த துறை அல்லது அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரிகளுக்கு அனுப்பப்படுகிறது என இந்த செயலியில் தெரிவிக்கப்படவில்லை என்று அந்த அமைப்பு கூறுகிறது. ஆரோக்கிய சேது செயலியின் அந்தரங்க கொள்கைகள், பயன்பாட்டு விதிகள் ஆகியவற்றை நிர்வகிக்கும் சட்ட வரையறைகள் எதுவும் இப்போது இல்லை. எனவே, இப்போது நோய்த் தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கை களுக்காக சேகரிக்கப்படும் தரவுகள், இந்திய அரசால் வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்படவும் வாய்ப்பு உண்டு என்று
அந்த அமைப்பு எச்சரிக்கிறது.

Tags : Health Seth , Is the Health Seth processor unsafe?
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில்...