திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து முதல்வர் பழனிசாமி, அமைச்சர் விஜயபாஸ்கர் நலம் விசாரிப்பு :எந்த உதவிகளையும் செய்ய தயார் எனவும் உறுதி!!

சென்னை: சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து மருத்துவரிடம் முதல்வர் பழனிசாமி தொலைபேசி மூலம் கேட்டறிந்துள்ளார். சென்னை திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவும், திமுக சென்னை மேற்கு மாவட்ட செயலாளராகவும் உள்ள ஜெ.அன்பழகன் கடந்த சில நாட்களாக ஒன்றிணைவோம் என்ற திமுக திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

இந்நிலையில், அவருக்கு தி.நகரில் உள்ள அவரது வீட்டில் சில நாட்களுக்கு முன்பு, திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. அதைதொடர்ந்து, அவர் சிகிச்சைக்காக குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜெ.அன்பழகன் உடல்நலம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். இந்த நிலையில், திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து முதல்வர் பழனிசாமி மருத்துவர் ரெலாவை கேட்டறிந்தார்.

ஜெ.அன்பழகனுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் ரெலாவிடம் தொலைபேசியில் பேசிய முதல்வர்,அரசு சார்பாக எந்த உதவிகளையும் செய்ய தயார் எனவும் உறுதி அளித்துள்ளார். அதே போல் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை குரோம்பேட்டை மருத்துவமனைக்கு நேரில் சென்று ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார். மருத்துவர் ரேலாவிடம் சிகிச்சை குறித்தும் அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டறிந்தார்.

Related Stories: