திருமண தகவல் மையம் மூலம் பெண்களை ஏமாற்றி நகை, பணம் அபேஸ்: வாலிபர் சிக்கினார்

தண்டையார்பேட்டை: வியாசர்பாடியை சேர்ந்தவர் அஜ்மல் நிஷார் (30). இவர், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமண தகவல் மையம் மூலம் திருவொற்றியூரை சேர்ந்த இளம்பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு,‘உங்களை திருமணம் செய்ய விரும்புகிறேன்,’’ என தெரிவித்துள்ளார். இதையடுத்து, இருவரும் செல்போனிலும், நேரிலும் சந்தித்து பேசி பழகி வந்துள்ளனர். சில நாட்கள் கழித்து, ‘‘எனக்கு கடன் பிரச்னை உள்ளது. கடனை அடைத்துவிட்டால் நாம் இருவரும் சந்தோசமாக வாழலாம்,’’ என கூறியுள்ளார். இதை நம்பிய இளம்பெண் திருமணத்திற்காக வைத்திருந்த ₹3 லட்சம், 15 சவரன் தங்க நகைகளை பெற்றோருக்கு தெரியாமல் அஜ்மலிடம் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், சில நாட்கள் கழித்து இளம்பெண்ணுடன் பேசுவதை அஜ்மல் தவிர்த்து வந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த பெண், இதுபற்றி பெற்றோரிடம் கூறியுள்ளார்.

அதன்பேரில்,  அவர்கள் அஜ்மலை பிடித்து, பணம், நகைகளை திருப்பி கேட்டுள்ளனர். அவர் தர மறுத்ததால் சரமாரியாக தாக்கி, வடக்கு கடற்கரை சில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், அவர், திருமண தகவல் மையம் மூலம் பல பெண்களை தொடர்பு கொண்டு திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி, பணம், நகை ஏமாற்றியது தெரிந்தது.

சில இளம்பெண்களின் போட்டோவை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டி பணம், நகை பறித்தும் தெரியவந்தது.இதையடுத்து கைது செய்யப்பட்ட அஜ்மல் நிஷாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: