×

உலகின் பல்லுயிர் பெருக்கத்தில் 8 சதவீதத்தை இந்தியாவால் பாதுகாக்க முடிந்துள்ளது: சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேட்டி

புதுடெல்லி: உலகின் பல்லுயிர் பெருக்கத்தில் 8 சதவீதத்தை இந்தியாவால் பாதுகாக்க முடிந்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். இன்று உலக சுற்றுச்சூழல் தினம். 1974ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது. 2020ம் ஆண்டு சுற்றுச்சூழல் தினத்துக்கான கருப்பொருளாக பல்லுயிர் பெருக்கத்தை ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

பல்லுயிர் பெருக்கம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபை, பல்லுயிர் பெருக்கம் என்பது அவசரமானது மட்டுமின்றி நமது இருத்தலியலுக்கான நெருக்கடியும் கூட. சமீப காலமாக, காட்டுத்தீ, வெட்டுக்கிளி தாக்குதல் மற்றும் தற்போது உலகையே உலுக்கி வரும் கோவிட்-19 பெருந்தொற்று நோய் என நாம் பல்வேறு அபாயங்களை சந்தித்து வருகிறோம். இவையனைத்தும் மனிதர்கள் மற்றும் வாழ்வின் வலைகள் ஒன்றுக்கொன்று சார்ந்திருப்பதை நிரூபிக்கிறது, என தெரிவித்திருந்தது.

இந்நிலையில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உலகின் பல்லுயிர் பெருக்கத்தில் 8 சதவீதத்தை இந்தியாவால் பாதுகாக்க முடிந்துள்ளது. இது சிறிய சாதனையல்ல. தடைகள் இருந்தபோதிலும் பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்கக்கூடிய ஒரு நாடு உள்ளது என்பதை இந்தியாவால் நிரூபிக்க முடிந்தது. நகரங்களில் உள்ள காடு அல்லது சீரழிந்த நிலத்தை வரைபடமாக்க அனைத்து மாநகராட்சிகளுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். அது நகர்ப்புற காடுகளை உருவாக்குவதற்கு ஒதுக்கப்பட்டிருந்தால், அது மக்கள் இயக்கமாக மாறும், என கூறியுள்ளார்.

Tags : Prakash Javadekar ,India ,world , World Environment Day, Prakash Javadekar, Biodiversity
× RELATED மத்திய அரசின் இலவச எரிவாயு வழங்கும்...